வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து  ஆறாம் திருநாள்

0 188
Stalin trichy visit

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நேற்று (டிச.25)  வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து  ஆறாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி தொடக்கமாக” நாராயணா என்னும் நாமம்” செவிமடுக்க திருநாராயணன் முத்துக் கொண்டை சாற்றி ; அதில் கலிங்கத்துராய் அணிந்து;  சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; மகர‌ கர்ண பத்ரம் திருக்காதில் அணிந்து; கண்டாபரணம் ; திருமார்பில் – சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; அதன் மேல் – ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம்; சந்திர ஹாரம் ; தேர்ந்தெடுத்து – வரிசையாக சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் மிக மிக நேர்த்தியாக அணிந்து : தங்கப் பூண் பவழ மாலை; 2 வட‌ முத்து மாலை; “திருப்பாவை மரகத பச்சை கிளி ” பதக்கம் அணிந்து வெண் பட்டு அணிந்து அதன் மேல் மஞ்சள் நிற பட்டு கபா என்னும் வஸ்திரம் அணிந்து பின் சேவையாக – பங்குனி உத்திர பதக்கம் – புஜ கீர்த்தி அணிந்து சேவை சாத்திக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.