வாளாடியில் உழவன் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு

0 80
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 11  திருச்சி மாவட்டம் லால்குடி லால்குடி அருகே வாளாடி கிராமத்தில் இயற்கை விவசாயிகளுக்காக உழவன் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது.

இந்த அலுவலகத்தை சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டி இயற்கை விவசாயி உ.சிவராமன் மூத்த விவசாயிகளோடு இணைந்து திறந்து வைத்து உரையாற்றினாரகள்.

இந்த உழவன் அறக்கட்டளை அலுவலகம் திறப்பின் முக்கிய நோக்கமானது
இயற்கை விவசாயத்தை கற்றுக்கொள்ள விரும்புவோர், இயற்கை விவசாயத்திற்கு தேவையான விதை முதல் இடுபொருட்கள் வரை பெற்றிட மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகள் மரம் நடுதல், நீர்நிலைகள் தூர்வாறுதல் போன்ற அனைத்து இயற்கை சார்ந்த உதவிகளும் செய்திட உறுதுணையாக உள்ளது.மேலும் இந்த அலுவலகத்தில் இயற்கை விவசாயம் சார்ந்து அறிந்துகொள்ள சிறு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இயற்கை விவசாயிகள், தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.