திருச்சி உறையூர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

0 52
Stalin trichy visit

திருச்சி, ஏப்.7  திருச்சி உறையூர் பகுதியில் அமைச்சர்  கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு- தாரை தப்பட்டை முழங்க பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர்  கே.என்.நேரு  நேற்று  உறையூர் பகுதியில் உள்ள வெக்காளியம்மன் கோவில் தெரு,நாடார் தெரு,பணிக்கன் தெரு, பாளையம் பஜார், உறையூர் கடைவீதி, பெரிய செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, நடன குதிரைகள், சிலம்பாட்டம், செண்டை மேளம்,தாரை தப்பட்டை மற்றும் மேள தாளங்கள் முழங்க , பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், குறிப்பாக பெண்கள் திரண்டு வந்து அவருக்கு ஆரத்தி எடுத்து, திலகமிட்டு வெற்றிக்கான வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.