திருச்சி எடத்தெரு நவநீதகிருஷ்ணன் கோவில் நவராத்திரி விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு!

0 468
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை பகுதி 24 வது வார்டு எடத்தெருவில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நவராத்திரி விழாவில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டு அக்கோவிலின் வளாகத்தை சுற்றி ஓவியங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து “கண்ணனைப் பற்றி ஆழ்வார்களின் பாசுரங்கள், பாரதியின் கவிதைகள் போன்றவற்றில் உள்ள சுவை மிகுந்த வரிகளை பகிர்ந்து கொள்வார்கள், ஏழைகளைத் தோழமை கொள்வான் தாழவரு துன்பமதிலும் நெஞ்சத் தளர்ச்சி கொள்ளாதவர்களுக்குச் செல்வமளிப்பான், நண்பனாய் மந்திரியாய் நல்லா சிரியருமாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்… உள்ள நயமிகுந்த பாசுரங்களை பகிர்ந்தது நினைவிற்கு வந்ததுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் ராஜசேகர், மதிவாணன், வட்ட கழக செயலாளர் கோவிந்தராஜ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் விவசாய அணியின் தலைவர் ராஜா (எ) பார்த்த சாரதி மற்றும் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.