தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

0 170
Stalin trichy visit

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே8) காலை வெளியாகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல் பரவியது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை என்ற https://results.digilocker.gov.in/     tnresults.nic.in இணையதளங்களில் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்

Leave A Reply

Your email address will not be published.