திருச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் உடலியக்கக் குறைபாடுடையோர், பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 9-ம் வகுப்பு முதல் இளநிலைக் கல்வி மற்றும் முதுநிலைக் கல்வி பயில்பவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
இத்திட்டத்தில் மாணவ, மாணவிகள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 30ந் தேதி ஆகும். பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தினை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் சரிபார்த்து 15.12.2021க்குள் பரிந்துரை செய்திட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அலுவலகத் தொலைபேசி எண் 0431-2412590 – ல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.