2 பஞ்சாயத்துக்களில் துணைத் தலைவர் தேர்தல்; 22-ந் தேதி நடக்கிறது

0 634
Stalin trichy visit

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதுபோல் இதர மாவட்டங்களில் காலியான பதவிகளுக்கும் தேர்தல் முடிந்து விட்டது.

இந்த நிலையில் கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்டக்குழு பஞ்சாயத்துகளிலும் துணை தலைவர்களை வார்டு உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக நடத்தப்படுகிறது. துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் தும்பலம் கிராம பஞ்சாயத்திலும், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் தேனூர் பஞ்சாயத்திலும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.