திருச்சி ஏர்போர்ட் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(37). இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து உள்ளார். இந்த நிலையில் இவர் வீட்டின் அருகில் வசித்து வந்த ஜேசு ரத்தினம் என்பவர் தனது நாட்டு துப்பாக்கி கொண்டு நாயை சுட்டு கொன்றதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜேசு ரத்தினத்தின் மீது செல்வராஜ் ஏர்போர்ட் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.