திருச்சி மாநகராட்சியில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் 450 லட்சம் மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி பணியை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய அவர், பிராட்டியூர், கருமண்டபம் பகுதிகளுக்கு ஏற்கனவே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு சரியாக தண்ணீர் செல்வதில்லை பம்பிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த குறையை போக்க இன்று புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
முதல்வர் நகராட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே நகராட்சி தேர்தல்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இதற்காகத்தான் கும்பகோணம் மாநகராட்சி மற்றும் 19 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெற்றது என்று உங்களுக்கு தெரியும். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் சிறையில் அடைத்து அவர்கள் வெற்றி பெற்றதாகவே அறிவிக்கப்பட்டனர். அவர்களைப்போலவே எங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி தேர்தல் ஆணையம் இருந்ததோ அதை விட தற்போது சுத்தமாகத்தான் உள்ளது.
கோவிலை திறக்கவில்லை என்றால் திறக்கவில்லை என்று போராட்டம் செய்வார்கள், திறந்தால் நாங்கள் சொல்லி தான் திறந்தோம் என்று சொல்வார்கள். ஏற்கனவே முதல்வரும் அறநிலையத்துறை அமைச்சரும் கோவிலை திறக்க முடிவு எடுத்ததை தெரிந்துகொண்டு போராட்டம் நடத்துகிறார்கள். திறந்த பிறகு நாங்கள் சொல்லி தான் திறந்தோம் என்று கூறுகிறார்கள்.