திருச்சி மாவட்டத்தில் இன்று 610 இடங்களில் கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

பின்னர் தசை சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான பேட்டரியால் இயங்கும் 6 சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினார். ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள இந்த சக்கர நாற்காலி தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்
கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.
இதேபோல் 13 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது. மேலும் மகளிருக்கான இலவச தையல் எந்திரம், திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.