திருச்சி மாவட்டம் மணப்பாறை சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 31). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மணப்பாறை திண்டுக்கல் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பஸ் ஒன்று தினேஷ்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதை அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.