திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நிலைய அதிகாரிகள் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0 356
Stalin trichy visit

அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்க திருச்சி கோட்டம் சார்பில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திகு கோட்ட செயலாளர் திருக்கோட்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நிலைய அதிகாரிகள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். துறை சார்ந்த தேர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

விடுப்பு அளிக்கும் அதிகாரத்தை மண்டல நிலைய மேலாளர்களுக்கு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு பெறாமல் ஒரே பதவியில் இருந்தால் அவருக்கு அந்த பதவி உயர்வுக்கு இணையான சம்பளம் அளிக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.