அரசின் உத்தரவை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் பல்கலைக்கழக நிர்வாகம்

0 359
Stalin trichy visit

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வந்த 10 கல்லூரிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இந்த கல்லூரிகளில் பணியாற்றி வரும் 600 ஆசிரியர்கள் மற்றும் 92 அலுவலர்களுக்கு கடந்த மே மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து அந்த கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரிய-ஆசிரியைகள் கடந்த மாதம் 23-ந் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கல்லூரி கல்வி இணை இயக்குனரிடமும் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 600 ஆசிரியர்கள் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து மனு அனுப்பினர்.

இதையடுத்து உயர்கல்வித்துறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 10 கல்லூரிகளின் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உடனடியாக பல்கலைக்கழகம் சம்பளம் வழங்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அரசின் உத்தரவை தொடர்ந்து சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் இது பற்றி அறிந்த பல்கலைக்கழக பணியாளர்கள், 10 கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு உத்தரவை நிறைவேற்ற முடியாமல் பல்கலைக்கழக நிர்வாகம் தவித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.