ஓய்வு பெற்ற அரசு ஊழியர் திடீர் சாவு

0 411
Stalin trichy visit

ராமநாதபுரம் மாவட்டம் அரியநாயகம் கீழத்தெருவை சேர்ந்தவர் தெய்வநாயகம் (வயது 57). ஒய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு தீபாவளிக்கு தனது குடும்பத்தினருக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக குடும்பத்துடன் திருச்சி வந்தார்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். பின்னர் அடுத்த நாள் காலை தெய்வநாயகம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.