சிறப்பு ஒலிம்பிக் புது அத்தியாயம்; திருச்சியில் அமைச்சர்கள் துவக்கி வைப்பு!
திருச்சி தேசியக் கல்லூரியில் சிறப்பு ஒலிம்பிக் புது அத்தியாயத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

சிறப்பு ஒலிம்பிக் செயலாளர் முனைவர் பிரசன்ன பாலாஜி வரவேற்புரை நிகழ்த்தினார். இல்லம் தேடி கல்வியுடன் இணைந்து இல்லம் தேடி விளையாட்டும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதனை உடனடியாக அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்ற செய்தியை மேடையிலேயே விளையாட்டுதுறை அமைச்சர் அறிவித்தார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தேசியக் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவின் நிறைவாக அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து டெல்டா மென்பொருள் நிறுவனம் தயாரித்துள்ள ” நம்ம அன்பில் இ-சேவை மய்யம் ” என்ற மென்பொருள் செயலி ஒன்றை வெளியிட்டனர்.
இந்நிகழ்வில் தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன், கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் குணசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.