திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா

0 356
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில்,தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த காட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதற்கான தேர்தல் நேற்று அக்டோபர் 31ம் தேதியன்று நடைபெற்றதில், மாநில தலைவராக ராஜேந்திரன் மாநிலத் துணைத்தலைவராக நல்லா கவுண்டன், செயலாளர்களாக அரங்க வீரபாண்டியன், விஸ்வநாதன் பொருளாளராக முத்துச்செல்வன் மாநில பொதுச்செயலாளராக சுரேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.