திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் நடத்த இருந்த காத்திருப்பு போராட்டம் வாபஸ்
திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பிளம்பர், எலக்ட்ரீசியன், கணினி ஆபரேட்டர் உள்பட பல்வேறு பணிகளை 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
இவர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அலுவலர் தனபால் முன்னிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.