விமான டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சிறப்பு விமானங்கள் இயக்க வலியுறுத்தல்
திருச்சியிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒரு விமான சேவையும் சென்னைக்கு 2 விமான சேவைகளும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சியிலிருந்து சென்னைக்கு சாதாரண நாட்களில் பயணக் கட்டணம் ரூ.3,989 ஆகவும் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு பயண கட்டணமாக ரூ.2,309 திருச்சியிலிருந்து சென்னைக்கு பயண கட்டணமாக ரூ.3,989ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானத்தில் அதிக அளவில் பொதுமக்கள் பயணம் செய்யும், நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது விமான டிக்கெட்டின் விலை பொது மக்களின் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டு வருவது வாடிக்கை. இந்த நிலையில் வரும் 3ம் தேதி பயணம் செய்வதற்கு தற்போதைய நிலவரப்படி திருச்சியிலிருந்து ஐதராபாத்துக்கு விமான கட்டணமாக ரூ.4,409 எனவும், திருச்சியில் இருந்து பெங்களூருக்கு விமான கட்டணம் ரூ.5,039 எனவும், திருச்சியிலிருந்து சென்னைக்கு விமான கட்டணம் ரூ.5,039 எனவும் உள்ளது.
இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் விமான கட்டணமும் அதிகரிக்கும் மீண்டும் வரும் 7ம் தேதி ஐதராபாத்தில் இருந்து திருச்சிக்கு பயண கட்டணம் ரூ.5,669 ஆகவும் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு ரூ.4,409 ஆகவும் சென்னையிலிருந்து திருச்சிக்கு பயண கட்டணமாக ரூ.4,409 ஆகவும் உள்ளது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் பயணக் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் சிறப்பு விமானங்கள் இயக்கினால் பயணக் கட்டணமும் குறைந்து வசதியுடனும் பயணிகள் பயணம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு விமான நிறுவனம் சிறப்பு விமானங்கள் இயக்குவதற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.