சாரதாஸ் ஜவுளிக்கடையில் சேலை திருடிய பெண் கைது

0 289
Stalin trichy visit

திருச்சி மலைக்கோட்டை மீனாட்சி சுந்தரம்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ரங்கராஜன்(வயது 75). இவர் திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் உள்ள சாரதாஸ் ஜவுளிக்கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சேலை வாங்குவது போல் உள்ளே வந்த ஒரு பெண் சேலைகளை பார்ப்பதுபோல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 சேலைகளை திருடி கொண்டு வாசலை நோக்கி வேகமாக சென்று உள்ளார்.

அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கடையில் சேலைகளை திருடி கொண்டு தப்ப முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் உத்தரவின் பேரில் மேலாளர் ரெங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி(46) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்த 4 சேலைகளை பறிமுதல் செய்தனர். இவர் மீது திருச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதில் 9 வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.