திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன் லட்சுமி நரசிம்மன்(வயது 46). இவருக்கு திருமணம் ஆகவில்லை.
தந்தை இறந்ததால் துக்கத்திலும், மன உளச்சலுடன் லட்சுமி நரசிம்மன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.