காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டை பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் குருபிரசாத்(வயது 21). கட்டிட கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறியில் காவிரி ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார்.
அப்போது அவர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கினார். முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையில் மீட்பு படையினர் காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபரை இரவு வரை தேடியும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2 வது நாளாக நேற்று மீண்டும் மீட்பு படையினர் காவிரி ஆற்றில் இறங்கி பல இடங்களிலும் தீவிரமாக தேடினர். இந்தநிலையில் 3 வது நாளான இன்றும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.