திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான திருவெறும்பூர், மணிகண்டம் மற்றம் புள்ளம்பாடி(மகளிர்) ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் நேரடி சேர்க்கை கடந்த மாதம் 30-ந் தேதி வரை நடைபெற்ற நிலையில் தற்போது நேரடி சேர்க்கை வருகிற 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ள தெரித்துக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.