விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

0 458
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 68) விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தில்லை நகரில் வசித்து வருகிறார். காமராஜ் நகரில் உள்ள வீட்டில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால் அதனைப் பார்வையிடுவதற்காக அங்கு வந்தார்.

அப்போது அரியமங்கலம் முத்துப்பிள்ளை தெருவை சேர்ந்த யுவராஜ்(வயது 23), காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தீபக்(வயது 16), காட்டூர் ஆயில் மில்லை சேர்ந்த தினேஷ்குமார் என்கிற கருவாடு(வயது 17) மற்றும் இவர்களது நண்பரான சமது ஆகிய நான்கு பேரும் சேர்ந்து நரசிம்மனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டினை சேதப்படுத்தி நரசிம்மனை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து நரசிம்மன் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து யுவராஜ், தீபக், தினேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்

Leave A Reply

Your email address will not be published.