அதிமுகவில் இணைந்த அமமுகவினருக்கு வரவேற்பு

0 349
Stalin trichy visit

அமமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நந்தினி V.சரவணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அமமுகவினர், அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான  மு.பரஞ்ஜோதி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான N.R.சிவபதி, கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் M.செல்வராசு, மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் M.தங்கவேல், முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் S.ரத்தினவேல், மல்லிகா சின்னச்சாமி மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.