ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.1.47 லட்சம் மீட்பு; போலீஸ் கமிஷனர் உரியவரிடம் ஒப்படைத்தார்

0 338
Stalin trichy visit

திருச்சி வயலூர் சாலை வாசன்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்மணி என்பவரை செல்போன் மூலம் ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டார். அவரிடம், எல்.ஐ.சி. போனஸ் தொகை வந்திருப்பதாக கூறி வங்கி விவரங்களை அவர் கேட்டுள்ளார். இதைநம்பிய வங்கி விவரங்களை இவர் தெரிவிக்கவே, தமிழ்மணியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.46 ஆயிரத்து 999-ஐ அவர் எடுத்துவிட்டார்.

இதுபோல் திருச்சி டி.வி.எஸ்.டோல் கேட் பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் ஆன்லைனில் தொலைக்காட்சி ஆர்டர் செய்துள்ளார். அப்போது அந்த ஆர்டா் தோல்வி அடைந்ததால் இவர் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர், ஒரு செல்போன் செயலியை இன்ஸ்டால் செய்யும்படி கூறவே இவரும் அதை இன்ஸ்டால் செய்துள்ளார்.

அதை பயன்படுத்தி இவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 465-ஐ அவர் எடுத்துவிட்டார். இதுகுறித்து இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகர் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரின் பணத்தையும் மீட்டனர். இதைத்தொடர்ந்து மீட்ட பணத்தை உரியவர்களிடம் நேற்று மாநகர போலீஸ்கமிஷனர் ஜி.கார்த்திகேயன் ஒப்படைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.