முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார்
திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில் நுட்ப அணியின் திருச்சி மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அருண், திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது;- கடந்த சில நாட்களாக பல்வேறு வாட்ஸ்
குழுக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தென்னூரை சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சாட்டையடி சகாபுதீன் என்பவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பி வருவதாலும், மேலும் சிறைவாசிகளை விடுதலை செய்யாவிட்டால் ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் ஒன்று திரட்டி
போராடுவேன் என்று பொய் பிரசாரம் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தரைக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், உண்மைக்கு புறம்பான தகவல்களை காணொளி மூலம் பரப்பி வருகிறார்.
இந்த காணொளிகள் மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும், மத கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதால் சகாபுதீன் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பதுடன், வலை தளங்களை முடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தநிகழ்வில் ஸ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மணன், மாவட்ட துணை அமைப்பாளர் சூர்யா, மேற்குத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, ஸ்ரீரங்கம் சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், அந்தநல்லூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், மிஸ்டர் இந்தியா பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.