அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி

0 277
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் இருங்களூர் ஊராட்சியில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் வின்சென்ட் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆரோக்கியசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜான்பிரிட்டோ, லாசர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர் வினோத் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.

கரூரில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் சுகிர்தராஜ் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில் சுமார் 70 பேர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி 6 நாள் நடைபெறுகிறது. 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 15 ஏழை எளிய 15 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.45 ஆயிரத்தை ஊராட்சி தலைவர் வழங்கினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சார்லஸ் மார்ட்டின் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.