கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

0 306
Stalin trichy visit

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது34). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு ரமேஷ் உடலை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.