வைகுண்ட ஏகாதேசி விழா : நம்மாழ்வார் மோட்சம் பெறும் நிகழ்வு

0 286
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவில் திருவரங்கணின் திருப்பாத கமலங்களில் தஞ்சம் அடையும் நம்மாழ்வார் மோட்சம் வெகு விமர்சையாக நடைபெற்றது – தென் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு திருவிழாக்களை ஒளிபரப்பு செய்த நியூஸ்7 தமிழ் 108 வைணவ ஆலயங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவை 21நாளும் பிரத்யேகமாக ஒளிபரப்பு செய்தது …

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழா இந்த ஆண்டு கடந்த 22 ஆம் தேதி திருநெடுனந் தாண்டகத்துடன் மிகச் சிறப்பாக துவங்கியது.

முன்னதாக பகல் பத்து உற்சவத்தில் ஆலயத்தில் உட்பிரகாரத்தில் உள்ள அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தார் அதன் பிறகு முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது.

பின்னர் இரப்பாத்து விழா துவங்கி சொர்க்கவாசல் வழியாக சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளிய நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காட்சியளித்தார் – இந்நிலையில் இராபத்து திருவிழாவில் கடைசி நாள் ஆன நேற்று காலை நம்பருமாள் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் உள்ள சந்திர புஷ்கரணையில் நீராடினார் திருமாமணி மண்டபத்தில் திருமஞ்சனம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதற்கு அடுத்தபடியாக விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் மோட்சம் வெகு விமர்சையாக நடைபெற்றது – திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ரங்க ராஜனனின் திருப்பாத கமலங்களை நம்மாழ்வார் தஞ்சமடைந்தார்.

மதுரை சித்திரை பெருந்திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சூரசம்கார பெருவிழா – திருநெல்வேலி ஆணி திருத்தேரோட்டம் – திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் போன்ற சைவ ஆலயங்களில் நடைபெற்ற பிரசித்திப்பெற்ற திருவிழாக்களை ஒளிபரப்பு செய்த நியூஸ் 7 தமிழ் வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கத்தில் 21 நாள் நடைபெற்ற வைகுண்ட ஏகாதேசி பெரு திருவிழாவை முழுவதும் காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.