வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் தண்ணீர் பானைக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்தது

0 445
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வுமையத்தில் தண்ணீர் பானைக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் சேர்ந்தவர் மதியழகன் இவரது மகன் ஹரிஷ் ஒன்னே கால் வயது தண்ணீர் பானைக்குள் விழுந்த சோப்பை எடுப்பதற்காக குனிந்தபோது தலைகீழாக கவிழ்ந்து உள்ளான்.

அதனை ஹரிஷ் குடும்பத்தினர் கவனிக்கவில்லை. சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஹரிஷ் தண்ணீருக்குள் தலைகீழாக கவிழ்ந்து உள்ளது தெரியவந்தது.

உடனடியாக ஹரிஷை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்திற்கு ஹரிஷ் உடன் எடுத்து சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.