உய்யக்கொண்டான் வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைபார்வையிட்டார் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்‌சேனா

0 476
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொளி காட்சியின் வாயிலான கூட்டத்திற்கு பின்னர் குடமுருட்டி ஆறு உய்யக்கொண்டான் வாய்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்‌சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நீர்வளத்துறையின் கூடுதல தலைமை செயலாளர் :  80 கோடி ரூபாய் மதிப்பில் 4964 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த தூர் வாரும் பணிகள் செய்ய திட்டம். சரியான நேரத்தில் வருகின்ற மே 31ம் தேதிக்கு முன்னதாக எல்லா தூர்வாரும் பணிகளும் முடிக்கப்படும்.  வேளாண் துறை,ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தோம்.  இங்கு கொஞ்சம் ஆக்கிரமிப்பு உள்ளது – அதை அகற்றுவதற்கான பணிகள் நடைநடைபெறும்.

கடை மடை வரை தடையில்லாது தண்ணீர் செல்ல இது வழிவகை செய்வோம் – திருச்சியில் அடுத்த 5 வாரங்கள் இந்த பணிகள் நடைபெறும். முக்கொம்பு கொள்ளிடம் ஆறு கட்டி முடிக்கப்பட்ட புதிய அனை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். முல்லை பெரியாறு அனையை பொறுத்த வரை அது தமிழகத்திற்கு தான் சொந்தம் Owner தமிழக அரசு தான்.

காவிரி – குண்டாறு என்பது இரண்டாவது பாகம் – அதற்கான பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.