சாலை விபத்தில் வாலிபர் பலி

0 277
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மேட்டுப்பட்டி சாலைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாஸ்கர் (22).இவர் முசிறிக்கு சொந்த வேலையாக வந்துவிட்டு மீண்டும் பைக்கில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பைக் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி காவல்துறையினர் இறந்து போன பாஸ்கர் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு பரிசோதனை செய்வதற்காக
முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பாஸ்கரின் தாய் ராணி அளித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.