கரும்பு கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் : மாவட்ட ஆட்சியர்
திருச்சி, ஜன.4 பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. கரும்பு கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும் என்றும், இடைத்தரகர்களை நம்ப வேண் டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 612 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப் பட இருக்கிறது. இதற்காக, வேளாண்மைத்துறை அலு வலர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள் முதல் குழு அமைக்கப்பட்டு கரும்பை கொள்முதல் செய் வதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. வட்டார அளவில் கரும்பு கொள்முதல் குழு நியமிக்கப்பட்டுள்ளதால் அந்தந்த வட்டாரத்தில் பயிரிடப் பட்டுள்ள கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்கப் பட உள்ளது. அதன்படி, திரு வானைக்காவல் அடுத்த திரு வளர்ச்சோலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, கரும்பின் உயரம், தரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆனால் இன்னும் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. ஓரிரு நாளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கரும்பு கொள் முதல் செய்யப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெய ராமன், வேளாண்மை இணை இயக்கு நர் முருகேசன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) மல்லிகா மற்றும் வேளாண், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உடன் சென்று கரும்பு வயல் களை பார்வையிட்டனர்.
மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு, கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களை யோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் விவ சாயிகள் தங்களிடம் கொள் முதல் செய்யவரும் அலுவலர் கள் குறித்த முழுமையான விவரங் கள் மற்றும் எந்த கூட்டுறவு சங்கத்துக்கு தங்களிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப் படுகிறது போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 200 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப் பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யும் அளவுக்கு கரும்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.