
துவாக்குடி அருகிலுள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் ஆடி சுவாதி சுந்தர மூர்த்தி சுவாமி விழாவை முன்னிட்டு 16 வகையான அபிஷேகங்கள் கலசபிஷேகம் மூல மந்திர ஜபம் ருத்திரா பாராயணம் செய்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.
திருச்சி துவாக்குடியில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.
ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் சேரமான் நாயனாருக்கும், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் உருவத்தில் காட்சி கொடுத்தார் என்றும் புராணம் சொல்கிறது. இதனால் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஆடி சுவாதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆடி சுவாதி முன்னிட்டு சுந்தரமூர்த்தி குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.

click the image to chat on whatsapp
கோவிலின் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகியோருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி, பழச்சாறு, பன்னீர், தேன், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் சுந்தரமூர்த்திக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் திருவாசகம் தேவாரம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜையை செயல் அலுவலர் வெற்றிவேல் முன்னிலையில் கோவில் அர்ச்சகர்கள் சோமசுந்தரர், ரமேஷ், ரவி சிவாச்சாரியர்கள் ஆகியோர் செய்தனர்.