காவிரி ஆற்றில் வெள்ளம் – தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

0 78
National

திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களை வெள்ளப்பகுதியில் இருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 80 போலீசார் கொண்ட திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியில் தயாராக இருக்க வேண்டும் என்றும், நீச்சல் தெரிந்த போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமித்தும், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகவும் கவனமுடன் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் கார்த்திகேன் அறிவுறுத்தினார். இவர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் (தலைமையிடம்) மற்றும் போலீஸ் உதவி கமிஷனர்கள் பலர் உடனிருந்தன

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!