அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை ரத்து செய்க – இந்து மக்கள் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

0 548
Stalin trichy visit

தமிழகத்தில் உள்ள ஆகம கோவில்களில் காலம் காலமாக பணியாற்றி வரும் சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சார்யார்களை பாதிக்கும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டத்தை ரத்து செய்க – இந்து மக்கள் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற தமிழக அரசின் புதிய திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி மலைக்கோட்டை வாசல் முன்பாக போராட்டம் நடைபெற்றது – மாநில செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.

இதனால் ஆகம கோயில்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சார்யார்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே அனைத்து சாதியினரும் அவர் அவர் சார்ந்த கோவில்களில் பல காலமாக இருந்து வரும் நிலையில் இந்த புதிய திட்டம் தேவை இல்லை என்றும் அவர்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.