திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 27). ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தனது காளையை ஒரு வேனில் ஏற்றி நண்பர்களுடன் சென்று
கொண்டிருந்தார். கொணலை அருகே சென்றபோது எதிரே வந்த ஒரு தனியார் பஸ் வேன் மீது மோதியது. இதில் வேன் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது நண்பர்கள் 7 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜல்லிக்கட்டு காளை உயிர் தப்பியது. விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.