திருச்சி,மே 20 திருவெறும்பூர் அருகே உள்ள மணிகண்டம் செட்டி ஊரணி பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது வீட்டை காரைக்காலை சேர்ந்த சௌந்தரராஜன் கார்த்திக் (35) என்பவர வாடகைக்கு எடுத்து பாண்டிச்சேரியில் போலி மதுபானம் தயாரிப்பது கூறிய மூலப்பொருள்களை வாங்கிவந்து திருவாரூரை பாலமுருகன் (32) வெற்றிச்செல்வன் (22) விஜயகுமார் (23) சூர்யா (25) ஆகியோரை வைத்து போலி மதுபானங்களை தயாரித்து போலி லேபிள்களை பாட்டில்களில் ஒட்டி திருச்சி சுற்றுவட்ட மாவட்டங்களுக்கு கள்ள மார்க்கெட்டில் கார்த்திக் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளான்.
இது சம்பந்தமாக மது அமலாக்க தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அதிரடியாக அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது கார்த்திக், பாலமுருகன், வெற்றி செல்வன், சூர்யா, விஜயகுமார், ஆகிய 5 பேரும் போலி மதுபானங்களை பாட்டிலில் நிரப்பி ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து ஆயிரத்து 700 கோட்டர் மதுபான பாட்டில்கள் இன்னோவா கார் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் திருவெறும்பூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மீராபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் பிடிபட்ட 5 பேரையும் ஆயிரத்து 700 மது பாட்டில்களையும் இன்னோவா கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் வெள்ளசாமியைத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சத்து 14 ஆயிரத்து 400 மதிப்பிலான மதுபானங்களை திருச்சி அருகே உள்ள இருங்களூர் வனப்பகுதியில் டிஎஸ்பி முத்தரசு தலைமையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மற்றும் போலீசார் அழித்தனர் மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் பாண்டிச்சேரியை சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன்(36) காரைக்கால் பகுதியை கார்த்திக் (33) இருவர் மீதும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.