அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்…
மணப்பாறையில் மிகவும் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் அருகே சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணிகள் நடைபெற்று முடிந்தை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு வழிபாடுகள் ஒன்றாம் தேதி தொடங்கியது. யாகசாலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு இன்று தாரை தப்பட்டை முழங்க புனித நீர் கோபுர சேர்த்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதை எடுத்து ஆலயத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
