கல்லக்குடியில் அருள்மிகு கல்லமேட்டு கருப்பண்ணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்
கல்லக்குடியில் அருள்மிகு கல்லமேட்டு கருப்பண்ணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள அருள்மிகு கல்லமேட்டு கருப்பண்ணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கல்லக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்று அருள் பாலித்து வரும் கல்லமேட்டு கருப்பண்ணசாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் கடந்த செப்டம்பர் 9 ம் தேதி பாலாலயம் செய்து புதிதாக புணரமைக்கும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 2ம் தேதி வெள்ளிக்கிழமை காலை மங்களஇசை,விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி அஷ்டபந்தனம் மருந்துசாத்துதல், 3ம் தேதி மாலை முதல்கால யாகபூஜையும்,இன்று காலை 7.30 மணியளவில் மங்களஇசை,தொடர்ந்து பாலகணபதிபூஜை, மூன்று,நான்காம் காலயாக பூஜை நடைபெற்று தொடர்ந்து யாத்ராதானம் கடம்புறப்பாடு செய்து ஆலயத்தின் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் உள்ள கல்லமேட்டு கருப்பண்ணசாமி,மதுரைவீரன்,பொன்னியம்மன் பாப்பாத்தி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சர்வசாதகம் நந்தகுமார்,முரளிவேம்புநாத சிவாச்சாரியார்கள் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று, தீபாராதையுடன் அபிஷேகம் நடைபெற்றது.விழாவில் டால்மியா சிமெண்ட் ஆலை துணை பொது மேலாளர் சுப்பையா, துணைசெயல்இயக்குநர் மகேஷ்,மேலாளர்கள் ராதாகிருஷ்ணகாந்த், ரமேஷ்பாபு,பாலசுப்பிரமணியன், முன்னாள் தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேக விழாவில் கல்லக்குடி, கீழரசூர்,மேலரசூர்,வரகுப்பை,தாப்பாய்,சமத்துவபுரங்கள்,கல்லகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை டால்மியா சிமெண்ட் நிர்வாகமும்,சுரங்கதொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.