‘பயோ என்சைம்’ குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

0 64

திருச்சி, மார்ச் 12  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு பயோ என்சைம் செய்முறையை விளக்கிய வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள்.

மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள நாளந்தா வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் விவசாயிகள்,பொதுமக்களுடன் இணைந்து பல்வேறு களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளான செ. லோகபாரதி,செ. மாஜிதா,சீ.இனியா, இ.கீர்த்திகா,மு. முத்துராஜலட்சுமி, ப.நந்தினி,ஹ.நித்திய ஸ்ரீ,இ.ஓவியா,த.பிரதீபா, த.கீ. பிரீத்திகா, ர.ரபீதா ஸ்ரீ,ம.சகுந்தலாதேவி மற்றும் மு.திலகவதி ஆகியோர் திருப்பைஞ்சீலி கிராமத்தில் பயோ என்சைம் (BIO ENZYME) தயாரிக்கும் முறை மற்றும் அதன் பலன்கள் குறித்த விளக்கத்தை விவசாயிகள் அறிந்து பயன் பெறும் வகையில் எளிய முறையில் விளக்கம் அளித்தனர்.

பயோ என்சைம் என்பது எளிதில் கிடைக்கும் பொருட்களான சிட்ரஸ் தோல்கள்,வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கலாம். இது பயிர்களின் தாவர வளர்ச்சிக்கு பயன்படுகிறது, மற்றும் இதன் மூலம் விவசாயத்தில் இரசாயன உள்ளீடுகளைக் குறைக்கலாம் என மாணவிகள் விளக்கமளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.