ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, மார்ச் 13 ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஏப்ரல் 4ம் தேதி மாநில இயக்குனரகம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு:-
முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தாளர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் முதற்கட்டமாக மாநில அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நேற்று நடைபெற்றது. மாநில துணை செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வராஜ், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதுகுறித்து அவர் நிறுவனம் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அடுத்த கட்டமாக ஏப்ரல் 4ம் தேதி இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரல் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அப்படி அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் இந்த போராட்ட வாபஸ் பெரும் என தெரிவித்தார்.