திருவாசி ஊராட்சியில் கிராமப்புற மதிப்பீடு
திருச்சி, மார்ச் 12 திருவாசியில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் கிராமப்புற மதிப்பீடு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி தலைமையில் திருவாசி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் வேளாண்மை துறையின் மூலம் பங்கேற்பு கிராமபுற மதிப்பீடு மூலம் கிராமத்தை வரைபடமாக வரைந்து காட்டி விளக்கினர்.
மேலும் அய்யன் வாய்க்காலில் கிராமம் தொடக்கத்திலிருந்து கிராமம் இறுதி வரை சமூக பரிமாற்று நீர் நடை பயணம் மேற்கொண்டனர். இதில் வேளாண்மை அலுவலர் தேசிங்கு ராஜா நன்றியுரை ஆற்றினார். பிற துறை சார்ந்த அலுவலர்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.
தனலெட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் தெளிப்பான் கையாளும் முறைகள் மற்றும் பயறு ஒன்டர் தெளிப்பு குறித்து செயல்விளக்கங்கள் செய்து காட்டினர். முன்னோடி விவசாயிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.