திருச்சி பொன்மலைப்பட்டி திருவிக தெருவை சேர்ந்தவர் சிவசங்கர்(35). எம்பிஏ படித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. இவருக்கு ரேவதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் சென்னையில் தங்கி வேலை செய்தபோது அங்கு உள்ள தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடனை கட்டமுடியாமல் மன வேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனால் மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.