திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்
திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 60 வயதுடைய முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.