எம்ஐடி கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா – திரைப்பட நடிகர் சூரி பங்கேற்பு

0 306
Stalin trichy visit

முசிறி எம் ஐ டி கல்வி குழுமத்தில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு எம்ஐடி கல்வி குழுமங்களின் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரவீன்குமார், செயலாளர் மோனிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.சுவாமி ஐயப்பன் அறக்கட்டளையின் நிர்வாகி ஆதித்யா நடராஜன், இயக்குனர் வெங்கடாசலம் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினர்.அப்போது உடல் திறன், அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகர் சூரி மாணவர்கள் மத்தியில் பேசினார். விழாவில் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைமையில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.