தொட்டியத்தில் தீமிதி விழா – பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொட்டியம் அருகே கணேசபுரம் ஜெ.ஜெ.நகரில் அமைந்துள்ள மேல் சமயபுரம் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 7-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் சென்று கரகம்பாலித்தல், அக்னிசட்டி எடுத்தல்,ஏரோப்பிளான் அலகுகுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை அம்மனுக்கு பக்தர்கள் செலுத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பக்தர்கள் விரதம் இருந்து சக்தி கரகம் பாலித்து பூக்குழி இறங்கினர். முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் செதுக்கப்பட்டது அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளினார்.