சமயபுரம் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

சமயபுரம் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் மதுபான கடை ஒன்றின் பாரில் வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் நேற்று சரணடைந்தார்.
சமயபுரம் அருகே எஸ்.கல்லுக்குடியைச் சேர்ந்தவர் 28 வயதான பாபு. இவர் சமயபுரம் கடைவீதியில் மாலை கட்டும் வேலை செய்து வந்தார். கடந்த 6 ம் தேதி இரவு சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் மது அருந்து கொண்டிருந்தபோது 5 க்கும. மேற்பட்ட நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான வீ.துறையூைர சேர்ந்த வெங்கடேசன், கணேசன், விநாயகமூர்த்தி ஆகியோர் கடந்த 9 ம் தேதி நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் ராஜீவ்காந்தி, அருண், ராமு, அலெக்ஸ், லெட்சுமணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்., இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 21 வயதான வள்ளிஅருணனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-ல் நீதிபதி பாலாஜி முன்பு நேற்று சரணடைந்தார். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.