தி.மு.க. பிரமுகர்கள் நடத்தும் பாரில் கள்ளச்சந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்தவர் கைது
திருச்சி, ஆக.12 திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் இந்நாள் பேரூராட்சி கவுன்சிலர் இணைந்து நடத்தும் பாரில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு அரசு மதுபானம் விற்றவரை திருவெறும்பூர் போலீசார் கைது
திருவெறும்பூர் பகுதியில் கள்ளச்சந்தையில் அரசு மதுபானம் விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள அரசு அனுமதி பெற்ற பார் இதை திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் மற்றும் திமுக கூத்தைப்பார் பேரூராட்சி கவுன்சிலர் ரஞ்சித் ஆகியோர் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் இந்த பாரில் கள்ளச் சந்தையில் அரசு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்ததாக திருவெறும்பூர் மலைக்கோவில் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆரோன்ராஜ் மகன் விவேக் (35) என்பவரை கைது செய்ததோடு அவரிடமிருந்து 31 குவாட்டர் மது பாட்டில்களும், 7 பீர் பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.