மாடித்தோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்!

0 294
Stalin trichy visit

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ந் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செம்பரை கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம்

ஆண்டு மாணவிகள் தங்களின் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் ஒரு பகுதியாக மாடி தோடத்தின் முக்கியத்துவத்தையும், அதனை அமைக்கும் முறை குறித்தும் அக்கிராமத்தில் உள்ள பெண்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்வில் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் மற்றும் கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.